புதன், 1 ஜூன், 2011

<>ஈழத்துப்பூராடனார் பாடல்<>

<object width="640" height="390"><param name="movie" value="http://www.youtube.com/v/InEwmANBOGQ&hl=en_US&feature=player_embedded&version=3%22%3E%3C/param%3E%3Cparam name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/InEwmANBOGQ&hl=en_US&feature=player_embedded&version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"></embed></object>


<iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/zeXNF4NxdaI" frameborder="0" allowfullscreen></iframe>

http://youtu.be/zeXNF4NxdaI

ஞாயிறு, 8 மே, 2011

<>தமிழர் அதிசயங்கள்<>

தென்னாடு முதல் கம்போடியா வரை தமிழர் சாம்ராச்சிய எச்சங்கள்உலகிலுள்ள எல்லா அதிசயங்களையும் வெல்லவல்ல தமிழர் அதிசயங்கள்.இதை அநேக தமிழரே அறியாமல் இருப்பதுதான் வேதனை தரும் செய்தி.காணொளி:உலகின் ஒப்பற்ற தமிழர் அதிசயங்கள்.

<object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/IN46a_PjKFM?version=3"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/IN46a_PjKFM?version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"></object>

http://www.youtube.com/watch?v=IN46a_PjKFM&feature=player_embedded


கம்போடியாவில் சூர்யவர்மனால் கட்டப்பட்ட தலம்.
இந்த ‘BBC documentary’ல் தமிழரின் பங்கு குறிப்பிடப்படவில்லை. நாமே நம்ம வரலாறுகளை அறியாமலிருக்கும் போது மற்றவர்களைக் குறை கூறி ஏது பலன்?!
அங்கூர் வாட் என்பது, அங்கூர், கம்போடியாவிலுள்ள ஒரு இந்துக் கோயில் தொகுதியாகும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் கட்டப்பட்டது.வாட் என்பது கோயில் என்பதைக் குறிக்கும் கெமர் மொழிச் சொல்.
ஒரு அகழியும், மூன்று மண்டபங்களும் மத்தியிலுள்ள ஐந்து கோயில்களைச் சூழவுள்ளன. மேற்கிலிருந்து வரும்போது அகழியின் மேல் அமைந்துள்ள நீண்ட பாலத்தினூடாக முதலாவது வெளி மண்டபத்தை அணுகலாம்.
முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (ceiling) தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இச் சுவரின் வெளிப்புறம் தூண்களோடுகூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபங்களினதும் சுவர்களில் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும்.
இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது. இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன.
மூன்றாவது மண்டபம், உயர்ந்த terrace இன் மீது அமைந்து ஒன்றுடனொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.